
மதுரை நகை வியாபாரியிடம் ரூ42 லட்சம் மதிப்பில் நகை பணம் வாங்கி மோசடி செய்ததாக தந்தை மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சீனி நாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில்பகுதியை சேர்ந்தவர் சடையன் மகன் குமார் 41. இவர் சேலத்தில் வெள்ளி நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
மதுரை போன்ற முக்கிய ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் பீ.பீ.குளத்தை ரத்தினசாமி நாடார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மகன்கள் பிரசன்னா, வெங்கடேசன் ஆகியோர் பணம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும்,ரூ 39லட்சத்து 20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளும் வாங்கி உள்ளனர்.
இவர்கள் தெற்கு கோபுரம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே நகைக்கடை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு 2015 நவம்பர் மாதம் வாங்கிய வெள்ளி நகைகள் மற்றும் பணத்தையும் தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து இந்த மோசடிகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.