
மதுரை மாநகராட்சி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி (03.06.2022) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ன் ஆலோசனையின்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன்,
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் (03.06.2022) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – தீவிர தூய்மைப் பணியினை தொடங்கி வைத்து நெகிழிக்கான மாற்று பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அரங்குகள், தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு ஆடியோ, பொதுமக்களுக்கு நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பைகள், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம், பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்குதல், தூய்மை குறித்து உறுதி மொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அமைச்சர்தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 150 மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், 300 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்;சி பகுதிகளில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து வாங்கி சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்கள் சக்திவேல் வார்டு எண்.14, திருமலை வார்டு எண்.33, மல்லிகா வார்டு எண்.51, கருப்பசாமி வார்டு எண்.41, மலையாண்டி வார்டு எண்.84 ஆகிய ஐந்து தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து மேயர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மேலும் பெரியார் பேருந்து நிலையம், திருமலை நாயக்கர் மகால் வளாகத்தில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் அவர்களால் நடப்பட்டது.
மேலும் மண்டலம் 3 வார்டு எண்.44 சி.எம்.ஆர்.ரோடு பகுதியில் மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள் பதிக்கும் பணி, வார்டு எண்.44 சி.எம்.ரோடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நல வாழ்வு மையத்திற்கும் பூமி பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, திருமதி.பாண்டிச்செல்வி, வாசுகி, முகேஷ்சர்மா, நகரப்பொறியாளர் லெட்சுமணன், நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர்கள் அமிர்தலிங்கம். மனோகரன், சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், விஜயகுமார், திரு.சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.