கல்விசெய்திகள்

மதுரை தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ (ஐடிஐ) மாணவ, மாணவிகள்‌ சேர்க்கை | விண்ணப்பிக்க அழைப்பு

Admission of male and female students in Madurai Vocational Training Institutes (ITI). Call to apply

நடப்பு (2022)‌ ஆண்டில்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌, மதுரை, அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ (மகளிர்‌) மதுரை மற்றும்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌, செக்காணூரணி ஆகியவற்றில்‌ சேர்ந்திட இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும்‌ முறை:

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய வேண்டும்‌. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகங்கள்‌ ஆகியவற்றில்‌ சேர்க்கை உதவி மையங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த விவரங்கள்‌ இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

எட்டாம்‌ வகுப்பு / பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ அதற்கு மேலும்‌ தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக செலுத்தலாம்.

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய கடைசி நாள்‌ : 20.07.2022,

மதிப்பெண்‌ அடிப்படையில்‌ நடைபெறும்‌ இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல்‌ மற்றும்‌ கலந்தாய்வு குறித்த விவரங்கள்‌ கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதனத்தில்‌ வெளியிடப்படும்‌.

மேலும்‌. தொழிற்பயிற்சி இலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செல்வதில்‌. ஏதேனும்‌ சந்தேகம்‌ ஏற்படும்‌. நேர்ஸிஸ்‌ கீழ்காணும்‌ மின்னஞ்சல்‌ முகஹியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌

மின்னஞ்சல் முகவரி: ricentremdu@gmail.com
தொடர்புக்கு: 9499055748

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: