செய்திகள்

மதுரை – தேனி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் | மே 27ந் தேதி முதல் துவக்கம்

Madurai - Theni special train without reservation | First launch on May 27th

மதுரை – தேனி ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதை மே 26 அன்று பாரத பிரதமர் அவர்களால் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மாலை 06.30 மணிக்கு துவக்கப்பட உள்ளது. அதே தினம் புதிய ரயில் சேவையும் துவக்கப்பட உள்ளது.

பின்பு மே 27 முதல் இந்த பிரிவில் வழக்கமான ரயில் சேவை துவங்க உள்ளது. அதன்படி மதுரை – தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையிலிருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தேனி – மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.

இந்த தகவலை மதுரை தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: