செய்திகள்

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | 6 கடைகளுக்கு நோட்டீஸ்

Officials of the Food Safety Department conducted a raid in Theppakulam area of Madurai Notice to 6 shops

மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தினர்.

மதுரை தெப்பக்குளம் முதல் விளக்குத்தூண் வரை இருக்கக்கூடிய சுமார் 25-க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 25 கிலோ சிக்கன், அழுகிய பழங்கள் 5 கிலோ, 23 கிலோ காலாவதியான பரோட்டா, காலாவதியான 9 லிட்டர் குழம்பு, தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

25 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் இன்று காலை சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் கலப்படமான ஆயிலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: