
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் தென்காக்கமாய் உள்ளது இதில் சிலர் புல் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று (13.07.22) காலை சுமார் 8:30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது பைபாஸ் சாலை முழுவதும் கரும்புகையாக காணப்பட்டதால். வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மோட்டார் வாகன அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமம் ஏற்பட்டது எனினும் துரிதமாக திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் விபத்து ஏதும் ஏற்படாத அளவிற்கு துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
இவர்கள் செயல்பாட்டினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் யாரேனும் சிகரெட்டை குடித்துவிட்டு அணைக்காமல் புல்வெளியில் போட்டுவிட்டு சென்றார்களா அல்லது தொழில் போட்டி காரணமாக வேண்டுமென்றே பற்ற வைத்து சென்றார்களா ? என்ற பல்வேறு கோணத்தில் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.