செய்திகள்

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

மதுரை மாவட்டம், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதி வண்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ (05.01.2021) வழங்கி தெரிவிக்கையில்:-

இப்பள்ளி 117 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இங்கு அரசு விதிமுறைப்படி மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து விலையில்லா மிதி வண்டிகளைப் பெற மாணவர்கள் வந்திருப்பது மிகுந்த பாராட்டுக்குறியதாகும்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மாண்புமிகு அம்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2011-12 முதல் 21.12.2020 வரை 52,31,493 விலையில்லா மடிக்கணினிகள் ரூ.7,322.65 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டளவில் 2020-21-ஆம் ஆண்டிற்கு 5,45,166 மாணவஃமாணவியர்களுக்கு ரூ.214.79 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்ட அளவில் 23,887 மாணவஃமாணவியர்களுக்கு ரூ.9,41,26,513 மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளன.

இன்று நடைபெறும் இவ்விழாவில் 404 மாணவர்களுக்கு ரூ.16,33,372 மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து பரவை அரசு உயர்நிலைப் பள்ளியில் 64 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,27,413 மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் (மேலூர்) ராஜேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி (மதுரை, இந்திராணி (திருமங்கலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சின்னதுரை, தூய மரியன்னை பள்ளியின் தாளாளர் அருள்திரு ஸ்டீபன் லூர்து பிரகாசம், தலைமையை ஆசிரியர் ஜான் அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: