மதுரை தூய்மைப் பணியாளர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பம் வழங்கல்: மாவட்ட ஆட்சியர் தகவல்
Madurai collector News

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக தூய்மை பணியாளர்கள் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா தூய்மைப் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களிலும், தனி நபராகவும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும் இதில் உறுப்பினராக சேரலாம்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்பு சாரா தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தையோ, அல்லது மதுரை தாட்கோ மாவட்ட மேலளர் அலுவலகத்தையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர்,” செயல் அலுவலர்/ கிராம நிர்வாக அலுவலரின்
கையொப்பத்துடன் மாவட்ட மேலாளர், தாட்கோ, மதுரை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து பயன் பெறலாம்.
பிறவாரியத்தில் உறுப்பினர்களாய் இருப்பவர்கள் இதில் சேர முடியாது. வாரியத்தில் சேரும் நபர்கள் தற்போது தூய்மைப்பணி புரிபவர்களாகவும் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி, கல்வி உதவித் தொகை, தொழிற்படிப்பு உதவி தொகை, திருமண உதவித் தொகை, மகப்போறு உதவி தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, எண்: 106, டிஆர்டிஏ வளாகம், பழைய இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம், மதுரை-625020. தொலைபேசி எண்: 0452-2529848-ல் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ். அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.