செய்திகள்போக்குவரத்து

மதுரை – தூத்துக்குடி செல்லும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு | தனியார் வாகன ஒட்டிகள் குறைக்க கோரிக்கை

Madurai to Thoothukudi toll road toll hike | Demand to reduce private vehicle traffic

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாக்கு உட்பட்ட பெரியார் பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை செல்லுமான சாலைக்கு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
.
கார்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கார்களுக்கு 75 ரூபாயிலிருந்து 85 ரூபாய் என பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு முறை பயணம் செய்ய கார்களுக்கு ருபாய் 115லிருந்து ரூபாய் 10 கூடுதலாக ரூபாய் 125 ரூபாய் உயர்ந்துள்ளது.

பஸ்களுக்கான ஒருமுறை கட்டணம் ரூபாய் 260. இருமுறை கட்டணம் ரூபாய் 390 என இருந்தது தற்போது ரூபாய் 20 கூடுதாலாக வசூல் செய்யபடுகிறது. லாரிகளுக்கான ஒருமுறை கட்டணம் ரூபாய் 140.

லாரிகளுக்கான இருமுறை கட்டணம் ரூபாய் 290 ரூபாயிலிருந்து 30 ருபாய் உயர்ந்து ஒரு முறை கட்டணம் ரூபாய் 170வசூல் செய்யப்படுகிறது. தற்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்ளுக்கான திடீர் கட்டண உயர்வு தனியார் கார்களுக்கான வாகன ஒட்டிகளை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே சாலை வரி வாங்கி மீண்டும் மீண்டும் சுங்க கட்டணம் செலுத்துவதால் மிகவும் பாதிப்படைகிறோம். கார்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்க கட்டணம் கேட்பதால் தற்பொழுது இது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. இதனை மத்திய அரசு ஆய்வு செய்து சுங்க கட்டணத்தை குறைக்க வழி செய்ய வேண்டும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: