செய்திகள்போக்குவரத்து

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்து | ரயில்கள் கடக்க முடியாமல் நிறுத்திவைப்பு

A truck collided with a railway gate near Tiruparangunram, Madurai Trains stopped

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட்டில் விவசாய அறுவடை இயந்திரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ரயில்வே தடுப்பு கம்பி குழாய் மின்சார ரயில் செல்வதற்காக போடப்பட்ட 25000 வோல்ட் மின் கம்பியில் உரசி நின்றது.

இதனால் மதுரை – செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்ற ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மதுரை – செங்கோட்டை ரயில் திருப்பரங்குன்றத்திலும், குருவாயூர் – சென்னை ரயில் கள்ளிக்குடியிலும், நாகர்கோயில் – கோயம்புத்தூர் ரயில் திருமங்கலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி மின் கம்பியில் உரசிய வாகன தடுப்பு கம்பியை அப்புறப்படுத்தி சீரமைக்கப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் செயல்படத் தொடங்கியது.

இந்த விபத்தினால் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய வாகனம் சிரமத்துக்குள்ளானது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ரயிலில் வந்த பயணிகள் ரயிலிலிருந்து இறங்கி, ரயில் நிலையங்களில் 30 நிமிடம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.ம்

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: