செய்திகள்போலீஸ் | தீயணைப்புத்துறை

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குடிபோதையில் நீச்சல் அடித்த மாநகராட்சி பணியாளர் நீரில் மூழ்கி சாவு

மதுரை மேல அனுப்பானடி ஹவுசில் போர்டு பகுதியை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் மகன் ஜெயராம் ( வயது 37.) மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ல் JCB ஒட்டுனராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்துள்ளார்.

பணியின் போது குடி போதையில் இருந்ததையடுத்து மதுரை 1 ல் உதவி பொறியாளர் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜேசுராஜா (எ) ஜெயராம் கடந்த 2 நாட்களாக போதையில் இருந்தாக கூறப்படுகிறது. இதனிடையே மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் ஒட்டுனராக உள்ள ராஜா என்ற நண்பருடன் சேர்ந்து இன்று சரவண பொய்கை அருகில் மது அருந்தியுள்ளனர்.

திடீரென ஜெயராம் சரவண பொய்கை யில் நீச்சலடித்து சென்றுள்ளார். தன் நண்பரையும் குளிக்க அழைத்த போது ராஜா வர மறுக்கவே நீரில் நீந்தி சென்ற ஜெயராம் முழ்கி பலியானார் இது குறித்து ஜெயராம் மனைவி ஜெயலட்சுமி அளித்த புகாரின பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயணைப்பு துறையினர் ஜெயராமின் சடலத்தை சரவணப்பொய்கையிலிருந்து மீட்டனர்.

பின்னர் அவர் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: