செய்திகள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Vinayagar Chaturthi procession by Hindu People's Party in Madurai Tiruparangundram

இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா இணைந்து மதுரை திருப்பரங்குன்றத்தில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கு மேற்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக திருப்பரங்குன்றம் சரவணபொய்கை வழியாக எடுத்துவரப்பட்டு கரைக்கப்பட்டது.

நடைபெற்ற இந்த ஊர்வலத்தை இலங்கை மட்டகளப்பு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் துவக்கி வைத்தார். அதற்கு முன்தாக சிறப்புரையாற்றினார்.

ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைதலைவர் பாம்பன் பாலன் சுவாமி, மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென் மாநில தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணா, செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் குமார் மற்றும் அனுமன்சேனா நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: