மதுரை தினமணி பதிப்பில் இதழியல் துறையில் பணியாற்றியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
A meeting program for those who worked in the field of journalism in the Madurai Dinamani edition

மதுரை தினமணி பதிப்பில் செய்தி ஆசிரியர்கள், மூத்த துணை ஆசிரியர்கள், தலைமை செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், தினமணி முன்னாள் செய்தி ஆசிரியர்கள் க. முருகேசன், பொன். ஞானசேகரன் ஆகியோர்களுக்கு சால்வைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
தினமணி முன்னாள் மூத்த துணை ஆசிரியர் காசி விஸ்வநாதனின், பிறந்த நாளையொட்டி, அவருக்கு, மதுரை தினமணி பதிப்பின் முன்னாள் இதழியல் துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பலர், தினமணியில் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பேசினர். முன்னாள் செய்தி ஆசிரியர்கள் ஆர்.சந்திரசேகரன், வி.சிவபெருமான், பா.ராஜா தலைமை நிருபர் கூடலரசன், மூத்த நிருபர்கள் ஆ.கோவிந்தன், எல்.கவிதா, துணை ஆசிரியர்கள் ராமசாமி, திருமலை நம்பி, டி.பி. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.