கலெக்டர்செய்திகள்

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப் 3ந் தேதி முதல் 13ந் தேதி வரை புத்தக கண்காட்சி

Book Fair from 3rd to 13th September at Tamukkam Maidan, Madurai

கூடல் மாமதுரையிலே கடந்த 2005-ஆம் ஆண்டு தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி முடிய அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது.

இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை/

மற்றும் பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: