கலெக்டர்செய்திகள்

மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறு, சிறு & நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் | அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும் | கலெக்டர் தகவல்

Special Business Loan Camp for Micro, Small & Medium Enterprises by Madurai Tamil Nadu Industry Investment Corporation A maximum of Rs.150 lakh will be given Collector Information

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) கடனுதவிக்கு அப்பாற்ப்பட்டு, தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கங்கள் மற்றும் GST தொடர்பான சந்தேங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை பெற உதவுதல் போன்ற தொழில்முறை சிரமங்களை கலைவதற்கும் உறுதுணையாக உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 17.08.2022 முதல் 02.09.2022 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி (TIIC)-யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS மற்றும் UYEGP போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு பிளாட் எண்.1A/4A, Dr.அம்பேத்கர் சாலை, மதுரை மாநகராட்சி அருகில், (MADITSSIA), மதுரை- 624 020 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) அலுவலகத்தை நேரிலும், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள். 0452-2533331, 87780 40572, 9444396842 மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: