செய்திகள்போக்குவரத்து

மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்‌ சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Madurai Tamil Nadu Government Transport Corporation Independence Day Celebration

75-வது சுதந்திர திருநாள்‌ அமுத பெருவிழாவினை மிக சிறப்பாக 15.08.2022. காலை 8.00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன்‌ தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்துசுதந்திர போராட்ட தயாகி திருநாவுக்கரசு சிறப்புரை வழங்கினர்‌. சுமார்‌ 9,05மணியளவில்‌ உயர்‌ மேலாண்‌ இயக்குனர்‌ ஆறுமுகம்‌ அணிவகுப்பு மரியாதை ஏற்று, தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்‌. அதனை தொடர்த்து சுகந்திர தின தலைமையுரை வழங்கினார்‌.

இதனை தொடர்ந்து 2021-2022 கல்வியாண்டில்‌ 10 மற்றும்‌ 12 வகுப்பில்‌ அதிக மதிப்பெண்களை பெற்ற தொழிலாளர்‌குழந்தைகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. மேலும்‌ மதுரை திண்டூகள்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மண்டலங்களை சார்ந்த அதிகப்பட்சம்‌ KMPL வழங்கிய ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ அதிகப்பட்சம்‌ EPKM வழங்கிய நடத்துனர்களுக்கு பரிசு மற்றும்‌ பாரட்டு சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டது.

மேலும்‌ மதுரை திண்டுகள்‌ மற்றும்‌ விருதுநகா மண்டலங்களை சார்ந்த சிறந்த கிளை மேலாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ , அலுவலக கண்காணிப்பாளர்கள்‌, அலுவலக பணியாளர்கள்‌, தொழில்நுட்ப பணியாளர்கள்‌, பணச்சீட்டு ஆய்வாளர்கள்‌, ஓட்டுநர்‌ பயிற்சி ஆசிரியர்கள்‌, தூய்மை நல பணியாளர்கள்‌ மற்றும்‌ பாதுகாவலருக்கு பரிசுகளும்‌ பாரட்டு சான்றிதழ்களும்‌ வழங்கப்பட்டது.

இறுதியாக தொழிலாளர்‌ நலத்துறை உதவி மேலாளர்‌ கலாதேவி நன்றியுரை வழங்கினர்‌. மேற்படி விழாவில்‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்‌ (மதுரை)லிட்‌ மதுரையின்‌ முதுநிலை துணை மேலாளர்‌ (மனிதவள மேம்பாடு) இளங்கோவன்‌, இணை இயக்குநர்‌ (மக்கள்‌ தொடர்பு) பாஸ்கரன்‌, அலுவல மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ சந்தானகிருஷ்ணன்‌, போக்குவரத்து கழக தொழில்‌ சங்க பிரதிநிதிகள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: