மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி சார்பாக திருப்பரங்குன்றம் கோவிலில் கலை விழா
Art Festival at Tiruparangunram Temple on behalf of Madurai Tamil Nadu Government College of Music

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் சார்பாக வருகின்ற 18.07.2022 அன்று மாலை 4.00 மணி அளவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் “தமிழ்நாடு நாள்” மற்றும் உலக இசை தினம்- கலை விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மதுரை அகில இந்திய வானொலி நிலைய குரலிசை கலைஞர் பாலாமணி ஈஸ்வரின் குரலிசை நிகழ்ச்சியும், டி.வி.ராமானுஜாசாருலு குரலிசை நிகழ்ச்சியும், மதுரை அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை இசை நிகழ்ச்சி, கலைமாமணி. ஆத்தூர் கோமதி குழுவினர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த இன்னிசை நிகழ்ச்சியை கண்டு களித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.