
மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் சேர்ந்த தனசேகர் என்பவர் அரிசிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று மதியம் தனது நான்கு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் நகரில் இருந்து போடி லைன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் தடுப்பு சுவர் பலத்த சேதமடைந்து பாலத்திற்கு கீழே விழுந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் காரை பத்திரமாக மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் பள்ளி குழந்தைகள் வீடு செல்வதற்கான நேரம் என்பதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதையடுத்து உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மேலும் வாகன ஓட்டுனர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்தும் கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீர் செய்து மேலும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்