செய்திகள்

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் ரூ.63.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை

Madurai News

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.88, 89 சோலையழகுபுரம் பகுதிகளில் ரூ.63.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் குடிநீர் மெயின் குழாய் அமைப்பதற்கான பணியினை ஆணையாளர்ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ (30.01.2021) துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது :

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது. அதன் அடிப்படையில் சோலையழகுபுரம் 1 மற்றும் 3 வது தெருவில் ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மெயின் அமைத்தல் பணியினையும், சோலையழகுபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பை நீக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கழிவுமண் அள்ளுதல் பணி/

மேலும், திருப்பதி நகர் 2வது குறுக்குத் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சோலையழகுபுரம் 3வது குறுக்குத் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பழனியாண்டவர் தெருவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தேவர் நகர் 1வது தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தல் என மொத்தம் ரூ.63.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு தொடங்கப் பட்டுள்ளது.

88 வார்டை பொறுத்தமட்டில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதி, டுரிப் நிதி ஆகிய நிதியிலிருந்து சாலை வசதி, கட்டிட வசதி, குடிநீர்; வசதி என ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வார்டு 88 மற்றும் 89 வார்டுப் பகுதியில் சாலை பணி, குடிநீர் அமைத்தல் என 12 பணிகள் ரூ.35.35 லட்சம் மதிப்பீட்டிலும், ஜானகி நகர், மகாலெட்சுமி கோவில் தெரு, சோலையழகுபுரம் மேட்டு குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்;சி பொதுநிதியிலிருந்து 8 சாலை பணிகள் ரூ.91.20 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. வார்டு எண்.88 மற்றும் 89 பகுதியில் ரூ.2 கோடியே 28 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது.

இப்பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் குடிநீர், பாதாள சாக்கடை, ஆழ்துளை கிணறு, பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால், கட்டிட பணிகள் என 30 பணிகள் ரூ.4 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மதுரையை பொறுத்தமட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.1295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு லோயர்கேம்பிலிருந்து இரும்பு குழாய்கள் மூலமாக 95 கிலோ மீட்டர் தூரம்முள்ள வைகை அணை அருகில் உள்ள பண்ணைப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து 57 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரைக்கு குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு 82 மேல்நிலை நீhத்தேக்க தொட்டிகள் மூலமாக 100 வார்டுகளுக்கும் 24 நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

40 ஆண்டுகளாக நிறையாத தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை கரையில் இருபுறமும் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், மத்திய மாவட்ட கூட்டுறவுத் வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை, முன்னாள் மேயர் கு.திரவியம், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிசெயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப்பொறியாளர் தியாகராசன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் ஜான் பீட்டர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: