செய்திகள்

மதுரை செட்டிக்குளம் ஊராட்சியில் | ரூ.8 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் | வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

P. Murthy, Minister of Commercial Taxes & Registration

மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சியில் (13.05.2022) நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 897 பயனாளிகளுக்கு ரூபாய் 8 கோடியே 14 இலட்சத்து 547 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு காலம் முடிவடைந்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களில் ஏறத்தாழ 70 சதவிகிதம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மதுரை மாவட்ட மேற்கு தொகுதியில், செட்டிக்குளம் ஊராட்சியில் 897 பயனாளிகளுக்கு ரூபாய் 8 கோடியே 14 இலட்சத்து 547 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையிலான அரசு மக்கள் நலனே முதன்மையாக கருதி மகளிர் நலனுக்காகவும், மாணவ, மாணவிர்கள் நலனுக்காகவும், அனைவருக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் சமூக நீதி பேணுகின்ற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் சூழ்நிலையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறை நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளோ,

அரசுத்துறை அலுவலர்களோ, எவர் தவறிழைத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இவ்விழாவில், வேளாண்மைத்துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு, ரூ.1,20,000/-மதிப்பிலும், நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,08,000/- மதிப்பிலும்,

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.12,750/-மதிப்பிலும், கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.1,50,00,000/- மதிப்பிலும்,

இதர திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,29,000/- மதிப்பிலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,28,00,000/- மதிப்பிலும், சூரிய சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.3,72,238/-மதிப்பிலும்,

தோட்டக்கலைத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,35,000/- மதிப்பிலும், தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,10,000/- மதிப்பிலும், மாவட்ட மத்திய கூட்டுறவுத்துறை சார்பில், வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 215 பயனாளிகளுக்குரூ.3,06,79,641/-மதிப்பிலும்,

மதுரை வடக்கு வடக்கு வட்டத்தின் சார்பில், வீட்டுமனைப்பட்டா திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.9,03,560/- மதிப்பிலும், மதுரை வடக்கு வட்டம் (ச.பா.தி) சார்பில், ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12,00,000/- மதிப்பிலும், மதுரை கிழக்கு வட்டம் சார்பில்,

வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 79 பயனாளிகளுக்கு ரூ.56,88,000/- மதிப்பிலும், மதுரை கிழக்கு வட்டம் (ச.பா.தி) சார்பில், ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12,00,000/- மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில், ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பிலும்,

இதர உதவித்தொகை திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.57,000/- மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், விலையில்லா சலவை பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.53,581/- மதிப்பிலும், விலையில்லா தையல் இயந்திம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.82,200/- மதிப்பிலும்,

வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.24,50,000/- மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 25 பயனாளிகளுக்கு ரூ.17,71,857/- மதிப்பிலும், தக்கசெயலிகளுடன் கூடிய திறன்பேசி 35 பயனாளிகளுக்கு ரூ.4,37,500/- மதிப்பிலும்,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பழுதடைந்த வீடுகள் பராமரிப்பு திட்டம் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000/- மதிப்பிலும், தாட்கோ சார்பில், அடையாள அட்டை 55 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு ரூ.63,00,000/- மதிப்பிலும்,

மாவட்ட தொழில் மையம் சார்பில், மானிய உதவித்தொகை 5 பயனாளிகளுக்கு ரூ.8,88,900/- மதிப்பிலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில், விலையில்லா தையல் இயந்திரம் 23 பயனாளிகளுக்கு ரூ.17,640/- மதிப்பிலும், வடக்கு வட்டம் (குடிமைப்பொருள்) சார்பில், குடும்ப அட்டை 50 பயனாளிகளுக்கும்,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மானிய உதவித்தொகை 17 நபர்களுக்கு ரூ.3,23,680/- மதிப்பிலும் என மொத்தாம் 897 பயனாளிகளுக்கு ரூ.8,14,00,547/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பா.வீரராகவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மு.சித்ராதேவி, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பூங்கோதை பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: