செய்திகள்போக்குவரத்து

மதுரை – செங்கோட்டை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

Madurai-Sengottai trains will run as usual

ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை – செங்கோட்டை – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை – செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: