
மதுரையின் சுற்றுலா அலுவலராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்ரீபாலமுருகன் . இவர் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்.
மதுரையில் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மதுரையின் சுற்றுலா அலுவலராக சிறப்பாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுலா அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் இவர் சிறப்பாக பல்வேறு தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுலாதுறைக்கு என்று ஒரு தனி பெயரினை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 24.08.2022 முதல் மீண்டும் மதுரையின் சுற்றுலா அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மதுரையில் சுற்றுலாதுறை சார்பில், பல்வேறு வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு, தனது பணியில் சிறப்புடன் இயங்கியவர். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் மதுரையில் புதிய நடவடிக்கைகளை மேற் கொண்டார்.
குறிப்பாக நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படும் வகையில் அரசு துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விழாக்கள் அனைத்திலும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கி ,அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். அதேபோல் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
முக்கியமாக பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று, அவர்களுக்கு நமது தமிழ் கலாச்சார முறைப்படி பாரம்பரியம் மாறாமல், பொங்கல் வைத்து, நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல், பாடலுடன் மிக பிரம்மாண்டாக மூன்று நாட்கள் சுற்றுலா திட்டத்தை சிறப்பாக செய்து காட்டியவர்.
கடந்த 4 ஆண்டுகளாக மதுரையில் சுற்றுலாதுறை சார்பில், சிறப்பான பல்வேறு செயல்களை நடத்தி காட்டிய ஸ்ரீபாலமுருகன் அவர்கள், மீண்டும் மதுரையின் சுற்றுலா அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு ஹலோ மதுரை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், தொடர்ச்சியாக மதுரைக்கு இன்னும் பல புதிய திட்டங்கள் சுற்றுலா துறை சார்பில் செய்து கொடுக்க வேண்டும் என்பது, மதுரை மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.