
மதுரை சிலைமான் பைபாஸ் சாலையில் குடிமை பொருள் வழங்கல் கடதல் தடுப்பு பிரிவு வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 115 மூடைகளில் 50 கிலோ எடை கொண்ட 5750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேஷன் அரிசியை கடத்தியது ராம்நாடு பரமக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பாபு மதுரையைச் சேர்ந்த கோவிந்தன், சபரி, முத்துப்பாடி, முருகன், சரவணன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இந்த ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட உரிமையாளர் ராமமூர்த்தி, பாபு ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் மீதமுள்ள 5 பேரை போலீசார் கைது செய்து 5750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1