கலெக்டர்செய்திகள்

மதுரை சிறுபான்மையின மக்கள்‌ கடன்‌ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அழைப்பு | கலெக்டர் தகவல்

Madurai Minority People Invited to Submit Loan Applications | Collector Information

தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்‌ கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்‌ திட்டங்களான தனிநபர்‌ கடன்‌, சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌, கைவினை கலைஞர்களுக்கு கடன்‌, கல்விக்‌ கடன்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது.

திட்டம்‌-1ன்‌ கீழ்‌ பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ நகர்ப்புறமாயின்‌ ரூ.1,20,000/-க்கு மிகாமலும்‌, கிராமப்புறமாயிருப்பின்‌ ரூ.98,000/- க்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. திட்டம்‌-2ன்‌ கீழ்‌ பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.8,00,000/- க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

திட்டம்‌-1ன்‌ கீழ்‌ தனிநபர்‌ கடன்‌ ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் ‌அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/- மும்‌, திட்டம்‌ 2-ன்கீழ்‌ ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்‌ அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/-. வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில்‌ அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

சுயஉதவிக்‌ குழுக்‌ கடன்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில்‌ கடன்‌ வழங்கப்படுகிறது. திட்டம்‌ 2-ன்கீழ்‌ ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன்‌ வழங்கப்படுகிறது.

மேலும்‌ சிறுபான்மையின மாணவ/ மாணவிகள்‌ அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்‌ இளங்களை/ முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்‌ கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ ரூ.20,00,000/- வரையில்‌ 3% வட்டி விகிதத்திலும்‌, திட்டம்‌ -2ன்‌ கீழ்‌ மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்‌ ரூ.30,00,000/- வரையிலும்‌ கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே மதுரை மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ கிறித்து, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ ஆகிய மதங்களைச்‌ சார்ந்த சிறுபான்மையின மக்கள்‌ கடன்‌ விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்‌ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

கடன்‌ மனுக்களுடன்‌ சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார்‌ அட்டை, வருமானச்‌ சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்‌ சான்று, கடன்‌ பெறும்‌ தொழில்‌ குறித்த விவரம்‌ / திட்ட அறிக்கை, ஓட்டுநர்‌ உரிமம்‌ (போக்குவரத்து வாகனங்கள்‌ கடன்‌ பெறுவதற்காக இருந்தால்‌ மட்டும்‌) மற்றும்‌ கூட்டுறவு வங்கி கோரும்‌ இதர ஆவணங்கள்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ்‌, உண்மைச்‌ சான்றிதழ்‌ (80௭06 சோ(/ர௦ன5 கல்விக்கட்டணங்கள்‌ செலுத்திய ரசீது/செலான்‌ மற்றும்‌“ 2 மதிப்பெண்‌ சான்றிதழ்‌ ஆகிய ஆவணங்களின்‌ ஒளிப்பட நகல்களையும்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

மேலும்‌ விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்‌.

அனைத்து சிறுபான்மையினர்‌ இனத்தைச்சார்ந்த மக்களும்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அனீஷ் சேகர் கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: