
மதுரை சிம்மக்கல் நகர்ப்புற வீடற்றோர் முதியோர் இல்லத்தில் இந்திய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் அனைவரையும் வரவேற்று நாட்டு நலனில் மக்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.
உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் மஸ்தான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் படையினர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர், அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு நிறுவனர் செந்தில்குமார், மக்கள் தொண்டன் அசோக்குமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோவிந்தராஜன் குடும்பத்தினர் முதியோர்களுக்கு உணவு வழங்கினர். முதியோர் இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
1
+1
+1
22
+1
+1