
தமிழக அரசின் கலைபண்பாட்டுத்துறையின் கீழ் சவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் இருபாலருக்கும் பள்ளி கல்வி தவிர ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ளும் வகையில் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் சவகர் சிறுவர் மன்றத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மாவட்ட மையம் (கலைபண்பாட்டு மையம் பாரதி உலா சாலை கோ.புதூர் ) விரிவாக்க மையம் (பி.டி.ராஜன் சாலை உழவர் சந்தை எதிரில் உள்ள மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி) ஊரக மையம் (ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒத்தக்கடை) ஆகிய மூன்று மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இம்மையங்களில் குரலிசை பரதம் ஓவியம் சிலம்பம் கீபோர்டு நாட்டுப்புற நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக சூன் 1ம் தேதி முதல் சனிக்கிழமை மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலைப்பயிற்சியில் சேர பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும். வேறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இக்கட்டணம் சூன் 2022 முதல் மார்ச் 2023 வரைக்கும் உள்ளதாகும்.
இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர்களுக்கு மாவட்ட மாநில தேசிய அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கவும் குளிர்கால கோடைகால பயிற்சி முகாம்கள் செயல்முறை பயிலரங்கம் கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420 மற்றும் 98425 96563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.