செய்திகள்
மதுரை சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
Ganesha Chaturthi Festival at Madurai Shakti Ganesha Temple

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அதிகாலையில் பால், பழம், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை சாற்றப்பட்டு, நெய்வேத்தியம் செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சக்தி விநாயகரை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கொழுக்கட்டை, புளியோதரை, பிரசாதம் வழங்கப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1