
மதுரை, கோ.புதூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகளில் 13.08.2022 உடன் முடிவடைந்த முதற்கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட காலியிடங்களில் பயிற்சியாளர்களை இணையதளம் வாயிலாக தேர்வு செய்யும்பொருட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்விற்காக 18.08.2222 முதல் இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள். 25.08.2022.
இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in
இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்நிலையத்தில் வழங்கப்படும்.
பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துத் தரப்படும்.
இந்நிலையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் இந்நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையம் ( HELP DESK ) வாயிலாக லவசமாக விண்ணப்பித்துத் தரப்படும்.
எனவே, பயிற்சியில் சேருவீர். பயன் பெறுவீர். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :.S. ரமேஷ்குமார், B.E., M.B.A, துணை இயக்குநர் / முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோ.புதூர், மதுரை – 625 007. தொலைபேசி எண் .0452 – 2903020
கூடுதல் தொலைபேசி எண் : 8825511818 9976010003.