மதுரை கோரிப்பாளையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
Additional surveillance cameras fitted at Madurai Goripalayam

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரையின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக அனைத்து திசைகளிலும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் மூலம் கோரிப்பாளயம் நான்கு பகுதிகளையும் தினசரி 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. திருட்டு சம்பவங்கள், விபத்துக்கள் போன்றவைகள் எந்த நேரத்தில் நிகழ்ந்தாலும் இதன் வாயிலாக எளிமையாக கண்டுபிடிக்கலாம்.
முக்கியமாக பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் பதிவு செய்யப்படும் காட்சிகளை அதனை அங்குள்ள போலீசார் கணினியில் கண்காணித்துக் கொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கோரிப்பாயைம் பகுதியில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடமிருந்து மதுரை காவல்துறைக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.