செய்திகள்போக்குவரத்து

மதுரை கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு நிரந்தர கடைகள் கட்ட ஏற்பாடு

Provision for construction of permanent shops for local products at 95 railway stations in Madurai division

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த ரயில் நிலையங்களில் தற்போது தற்காலிக விற்பனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரையில் சுங்குடி சேலைகள், தூத்துக்குடியில் மக்ரூன், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், பழனியில் பஞ்சாமிர்தம், ராமேஸ்வரத்தில் கடல்பாசி, திருநெல்வேலியில் பனை பொருட்கள் போன்ற உள்ளூர் தயாரிப்புகள் ரயில் நிலையங்களில் விற்பனையாகி வருகின்றன.

ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க நிரந்தர கடைகள் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிரந்தர கடைகள் தேசிய வடிவமைப்பு நிறுவன ஆலோசனையின் பேரில் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக மதுரைக் கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் நவீன கடைகள் கட்ட ரயில்வே வாரியம் ரூபாய் 5.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதே போல சென்னை கோட்டத்தில் 133 ரயில் நிலையங்கள் மற்றும் திருச்சி கோட்டத்தில் 93 ரயில் நிலையங்களில் நிரந்தர கடைகள் கட்ட முறையே ரூபாய் 7.98 கோடி மற்றும் ரூபாய் 5.38: கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: