செய்திகள்
மதுரை கேனன் கிளப் 36வது நாய்கள் கண்காட்சியில் 450க்கு மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
More than 450 dogs participated in Madurai Cannon Club 36th Dog Show

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள மன்னர் கல்லூரியில் மதுரை கேனன் கிளப் சார்பாக 36வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 450க்கு மேற்பட்ட நாய்கள் 45க்கும் மேற்பட்ட அரிய வகை நாய்களும் (நாகு, அர்ஜென்டினோ, மல்டீஸ், குல் மஸ்டிப்,கன் கொசோ, ஜெர்மன் ஷெஃபர்ட்,ஃபாக்ஸ் ஸ்டரியைர்) பங்கேற்றது 1998ல் கேனன் கிளப் தொடங்கப்பட்டு 23 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் 450 க்கு மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. 45க்கு மேற்பட்ட புதிய வகை நாய்கள் பங்கேற்றன. இதில் புதிய வகை கட்டைக்கால் நாய் பங்கேற்றது மற்றும் இதில் நாய்களின் தரம், உயரம், பயிற்ச்சி, துரித செயல்பாடுகளை வைத்து இதில் சிறந்த நாய்களுக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது என கேனன் கிளப் செயலாளர் ராமநாதன் தெரிவித்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1