செய்திகள்மாநகராட்சி

மதுரை கூடல்நகர் பகுதிகளில் சாலை பணிகள் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் ஆய்வு

Road works in Madurai Koodalnagar areas | Mayor V. Indrani Ponvasant review

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.2 கூடல்நகர் ரேடியோ ஸ்டேசன் ரோடு மற்றும் பூமன் நகர் பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் (17.06.2022) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளான கூடல்நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பெய்த மழையினால் அப்பகுதி சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் பயன் படுத்துவதற்கு ஏற்ற நிலை இல்லாமல் உள்ளது. இதனை  மேயர்  ஆய்வு மேற்கொண்டு சாலையை தற்காலிகமாக சீர்செய்வது மற்றும் புதிய சாலை அமைப்பதற்கு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து மண்டலம் 1 வார்டு எண்.14 புதூர் மண்மலை மேடு பகுதியில் உள்ள வாய்க்கால் தூhர்வாரும் பணியினை பார்வையிட்டார்கள். புதூரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கும் மருந்துகள், சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, பணியாளர்கள் வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவம் பராமரிக்குமாறு மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் திவாசுகி, சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ், அமிர்தலிங்கம், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: