
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் போடி லயன் மேம்பாலத்தில் மதியம் மூன்று மணி அளவில் (31.07.2022) சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பாலத்தில் ஏறும் பொழுது தனியாக அபார்ட்மெண்ட் எதிரே திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகன ஓட்டி, பின்னால் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தினார். இதனால் லாரி மோதுவதிலிருந்து அவர் உயிர் தப்பினார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாலத்தில் உள்ள இரும்பு கம்பியை பிடிக்க வைத்து எவ்வளவு முயற்சித்தும் வலிப்பு நிற்கவில்லை.
வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தால் அங்கு இருந்த ஒரு இளைஞர் அவரை அப்படியே தூக்கி பாலத்துக்கு கீழே மரத்தின் அடியில் கொண்டு சென்று நிழலில் அமர வைத்தார். அ தன் பிறகு 108க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெரியார் பேருந்து நிலையம் 108 அவசர கால ஊர்தி அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அனுமதித்தனர்.
நல்வாய்ப்பாக பின்னால் வந்த இளைஞர் பின்னால் வரக்கூடிய வாகனங்களை உடனடியாக தடுத்து நிறுத்தியதால் வாகனத்தில் இருந்து மோதாமல் உயிர் தப்பித்தார். மேலும் இளைஞர் ஒருவர் இவரை தூக்கி சென்றது அப்பகுதியில் மக்கள் அவரை வெகுவாக பாராட்டு தெரிவித்தனர். வலிப்பு நோயால் நேற்று முன்தினம் மதுரை பழங்காநத்தம் பகுதி கோவிலில் ஒருவர் கூல் காட்சிம்போது இறந்தது குறிப்பிடத்தக்கது.