
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ராம் நகர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியாவது நடைபெற்று வருகிறது.
இதனால் சாலையில் குழிகள் தோன்றியிருப்பதால் பாதி அளவுக்கு சாலையை மறைத்து போக்குவரத்து செல்ல வேண்டி உள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு அவசரக்கால ஊர்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சில நிமிடங்கள் கடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்று இரவு ஒரு அவசரகால ஊர்தி போக்குவரத்து நெரிசலில் சிக்கி பின் சுமார் 15 நிமிட தாமதத்துக்கு பின் கடந்து சென்றது. வானமாமலை நகர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக போக்குவரத்து காவல்துறையினரை அந்த இடத்தில் நியமிக்க வேண்டும் அல்லது விரைவில் அப்பகுதி சாலையை பாரமரித்து வாகனங்கள் வழக்கம்போல் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.