செய்திகள்புகார்

மதுரை காமராஜர் பல்கலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கும் பணி வழங்கிட பல்கலை வாயிலில் கண்டன ஆர்பாட்டம்

Madurai Kamaraj University protested at the university gate to give jobs to the 136 sacked people.

மதுரை காமராசர் பல்கலைக்கழக வாயிலில் தமிழக ஆளுநரை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 80 பேர் கலந்துகொண்டனர். மதுரை தெற்கு மாவட்ட விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் முன்னிலை வகித்தார்.

மாநில துணைசெயலாளர் இளந்தென்றல், சிறப்புரை மாநில முதன்மை செயலாளர் பாவரசு, மாநில துணைசெயலாளர் மாலின், பல்கலை சின்னா, பார்த்தசாரதி உள்ளிட்ட 80 பேர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில அரசின் முதல்வர், அமைச்சர் உயர் கல்வி துறையை கலந்து கொள்ளாமல் ஆளுநர் தன்னிச்சையாக காமராசர் பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேலும், தேர்வு ஆணையர் தலித் என்றாதால் பட்டமளிப்பு விழாவில் மேடையிலிருந்து இறக்கியதும், பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேருக்கு பணி வழங்க கோரியும். உசிலம்பட்டி பகுதியில் ஏற்படும் சாதிய மோதல் மற்றும் தலித் விரோத போக்கினை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ச்சியாக மதுரை காமராஜர் பல்கலையில் பணிபுரிந்த 136 பேருக்கு பணி வழங்கிட போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனேவ, தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பணி இழந்து தவிக்கும் 136 குடும்பங்களுக்கும் உரிய பணி நியமன ஆணை வழங்கி உத்தரவு பிறபிக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: