மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆதிதிராவிட ஆசிரியர், மாணவர், அலுவலர் நல குழு புதிய உறுப்பினர்கள் நியமனம்
Madurai Kamaraj University Adi Dravida Faculty, Student, Officer Welfare Committee appointment of new members

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குமார் தலைமையில் ஆதிதிராவிட ஆசிரியர், மாணவர், அலுவலர் நல குழு (welfare committee) அமைக்கப்பட்டது. துணைவேந்தர் குமார், தலைவராகவும், பதிவாளர் சிவகுமார் செயலாளராகவும் பல்கலை பேராசிரியர் உள்பட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குமார் தலைமையில்,பதிவாளர் சிவகுமார் செயலாளராகவும் கொண்ட ஆதிதிராவிடர் ஆசிரியர் ,மாணவர், அலுவலர் நலக்குழு அமைக்கப்பட்டது.
இதில் பல்கலை பேராசிரியர் முனியாண்டி மற்றும் கண்காணிப்பாளர் பார்த்தசாரதி அலுவலர்கள் புருஷோத்தமன், பூங்கொடி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதில் பல்கலையில் பணிபுரியும் ஆகி திராவிட ஆசிரியர், மாணவர், மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த குழுவிடம் கூறலாம்.
நல குழுவினர் விசாரணை செய்து அதற்கான தீர்வுகளை காண்பர். ஆதி திராவிட ஆசிரியர், மாணவர், அலுவலர்கள் குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.