செய்திகள்புகார்மாநகராட்சி

மதுரை காமராசபுரம், பாலரங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பு | நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

Madurai Kamarashapuram, Palarangapuram area frequent blockage of underground drain | Public demand for permanent solution

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட காமராசபுரம், பாலரங்கபுரம், கீழ் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

நெருக்கடிமிகுந்த பகுதிகளில் வீடுகள் அதிகம் இருப்பதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை மூலம் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொரானா மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் தெற்கு மண்டல அதிகாரிகளிடம் முறையிடும் போது அவ்வப்போது மட்டுமே கழிவு நீர் அப்புறபடுத்தும் வாகனம் மூலம் தற்காலிகமாக தீர்வு செய்து வருகின்றனர்.

மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஒடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

எனவே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படாமல் இருக்க பாதாள சாக்கடைகளை புனரமைக்கவோ அல்லது ஆழப்படுத்தி அமைக்கவும் கூடுதல் பாதாள சாக்கடைகளை அமைத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: