
மதுரை நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (01.08.2022) கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற கட்டிட தொழிலாளி, கட்டுமான பணியின் பொழுது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக சக தொழிலாளர்கள் அவசரகாலம் 108க்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 மருத்துவ உதவியாளர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என உறுதி செய்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு. பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1