மதுரை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Madurai Collector-led public grievance day meeting

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.05.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அறுவுறுத்தினார்.
இன்றைய தினம் நடைபெற்றகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாதிச்சான்றுகள் வேண்டி17 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான3 மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை.
மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான61 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 68மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரியது (சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய்.
மேலும், பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) தொடர்பான 10 மனுக்கள், புகார் தொடர்பான 30மனுக்கள். கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியதுதொடர்பான 11 மனுக்கள்.
கூடுதலாக திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான14 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பயன்கள்.
மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான2 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், இராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 121 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 157 என மொத்தம் 574 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்அவர்கள்உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.