
மதுரை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள டெம்போ வாகனத்தை ஏலத்தில் விற்பனை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வருகின்ற 26.05.2022 (வியாழக்கிழமை) அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 11.00 மணியளவில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் நடைபெறவுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் பொது ஏலத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.62,500/-+GST நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1