செய்திகள்முகாம் | மருத்துவம்

மதுரை கருப்பாயூரணியில் கால்நடைத்துறை சார்பில் பொதுமக்கள் கலந்துறையாடல் முகாம்

Public participation camp on behalf of Animal Husbandry Department in Madurai Karupayurani

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பாயூரணி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் பொதுமக்கள் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது.

கால்நடைத்துறை இணை இயக்குநர் நடராஜன், உதவி இயக்குநர் சரவணன், கருப்பாயூரணி மருத்துவர் தீனா மோனிஷா, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் இதில் பொது மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்.

இந்த முகாமில் ஆடுகளை எவ்வாறு பராமரிப்பது, தரம் பிரித்து, எவ்வாறு வாங்குவது மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் நோய் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆடுகளுக்கு வழங்கப்படும் தீவனம், அடர் தீவன உணவு வகைகள், ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிட்சை அளிக்கும் முறைகள் போன்றவை பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இம்முகாமில் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தமிழக அரசின் ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: