செய்திகள்விபத்து

மதுரை ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலையில் குற்றாலத்திற்கு 18 பேர் சென்ற வாகனம் விபத்து | சம்பவ இடத்தில் இருவர் பலி

A vehicle carrying 18 people to the shrine met with an accident on the Madurai Othakadai National Highway Two people died on the spot

கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற வாகனம், மதுரை ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலை செல்லும் போது, தண்ணீர் லாரி மீதி மோதி விபத்து சம்பவ இடத்தில் இருவர் பலி. ஐந்து பேர் படுகாயம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ஒப்பந்த முறையில் தண்ணீர் லாரி செயல்பட்டு வருகிறது. இந்த வாகனம் சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வேகமாக வந்த வாகனம் தண்ணீர் லாரி மீது மோதியதில் ஏற்பட்டுள்ளது.

வாகனத்தில் வந்த ஐந்து பேர் பலத்த காயமுற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் சம்பவ இடத்தில் பலியான பயணி சௌந்தர் மற்றும் வேல் ஓட்டுநர் பிரபு ஆகியோரின் உடல்களை போலீசார் பதிவுகள் செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்த தண்ணீரில் லாரி மீது வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். குற்றாலத்திற்கு சென்ற சுற்றுலா பயணி வேன் மோதி இருவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: