மதுரை ஐராவதநல்லூரில் ரூ.2.88 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் | மேயர் துவக்கிவைத்தார்
Purified drinking water worth Rs. 2.88 lakhs in Madurai Airavathanallur | The mayor initiated

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில் (28.06.2022) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம், சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக 15 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 8 மனுக்களும், குடிநீர் இணைப்பு மற்றும் பழுதுகள் தொடர்பாக 6 மனுக்களும், சாலை வசதி வேண்டி 21 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 11 மனுக்களும், பிற மண்டலங்கள் தொடர்பாக 1 மனுவும் என மொத்தம் 63 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண வேண்டும் என மாண்புமிகு மேயர் அவர்கள் உத்தரவிட்டார். சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 161 மனுக்களில் 128 மனுக்களுக்கு தீH;வு காணப்பட்டது மீதமுள்ள 33 மனுக்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மண்டலம் 4 வார்டு எண்.41 ஐராவதநல்லூர் பகுதியில் நீண்டகாலமாக செயல்பாடற்று இருந்து சுத்திகரிக்கப்பட்ட இயந்திரத்தை ரூ.2.88 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்து இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேயர் திறந்து வைத்தார்.
மேலும் வார்டு எண்.45 காமராஜபுரம் இந்திரா நகர் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் (துNNருசுஆ) புதிதாக பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு மேயர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், உதவிப்பொறியாளர் ஷர்புதீன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.