
மதுரையின் புகழ் பெற்ற பழமை வாய்ந்த ஏ.வி.மேம்பாலத்தின் ரோட்டோர விளக்குகள் முழுமையாக எரியாமல் உள்ளது. மேலும் 35 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தூண்கள் அதிகமாக பழுதாகி இருக்கிறது. இதனால் வயர்கள் அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வயர்கள் தொங்கிக் கொண்டு உள்ளன.
மேலும், பாலத்தின் சாலை போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், இருட்டாக காணப்பட்டு வருகிறது. குறைவான மின் விளக்குகள் மற்றும் தூண்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகம் அதிகமான புதிய தூண்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த வேண்டும் மழை காலமாக துரிதமாக செயல்பட வேண்டும். இல்லையேல் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் ஏ.வி.மேம்பாலத்தின் மின் விளக்குகள் மற்றும் வயர்கள் சரி செய்யப்பட்டால் மழை காலத்தில் விபத்தில்லாத பயணங்களை மதுரை பொதுமக்கள் பெறுமுடியும் என்பதை மாநகராட்சி நினைவில் கொள்ள வேண்டும்.