
மதுரை, எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்தது ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில், கலசத்தில் உள்ள தீர்த்தங்களை பூஜிக்கச் செய்த பின்பு, கோபுரத்தின் மேல் உள்ள கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோஜனம் செய்த வேத, விற்பன்னர்கள் தீப, தூப ஆராதனைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது.
புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ,கோயில் நிர்வாக சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ,சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில், கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1