
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து டன் கணக்கில் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த மினி லாரியை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது லாரியில் 40 மூடைகளில் 40 கிலோ வீதம் வைக்கபட்டிருந்த 1.6 டன் (1600 கிலோ) ரேசன் அரிசியை இருந்து ரேசன் அரிசியை கைப்பற்றினர். தொடர்ந்து மினி லாரியை ஒட்டி வந்த சோலையழகுபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரையும், ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பழனிக்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.