செய்திகள்மாநகராட்சி

மதுரை எரிவாயு நுகர்வோர்‌ குறைதீர்க்கும் கூட்டம் | பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு

Madurai Gas Consumer Redressal Meeting | The public is invited to attend

மதுரை மாவட்டத்தில்‌ எரிவாயு நுகர்வோர்‌ குறைதீர்க்கும் கூட்டம்‌ வருகிற 21.06.2022-ஆம்‌ தேதியன்று பிற்பகல்‌ 4.30 மணியளவில்‌ மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ மதுரை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ தலைமையில்‌ நடைபெற உள்ளது.

இதில்‌, எண்ணெய்‌ நிறுவன மேலாளர்கள்‌, எரிவாயு நுகர்வோர்கள்‌, எரிவாயு முகவர்கள்‌ மற்றும்‌ அனைத்து குடிமை பொருள்‌ வட்டாட்சியர்கள்‌ மற்றும்‌ வட்ட வழங்கல்‌ அலுவலர்கள்‌ கலந்து ‌ கொள்ள ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

எனவே, மதுரை மாவட்டத்தில்‌ உள்ள சமையல்‌ எரிவாயு உருளைகளைப்‌ பயன்படுத்தும்‌ பொதுமக்கள்‌ இக்குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ கலந்து கொள்ளும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ அனைவரும்‌ கொரோனா நோய்‌ தொற்றினை குறைப்பதற்காக முகக்‌ கவசம்‌ அணிந்து வரவேண்டும்‌ என்றும்‌, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: