மதுரை

மதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை ஆவின் பால்பண்ணை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பாலகங்களை நிறுவி வருகின்றது. இந்த ஆவின் பாலகங்களில் ஆவின் பால் மற்றும் ஆவின் தயாரிப்புகளான ஆவின் தயிர், மசாலா மோர், வெண்ணை, நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், பன்னீர், பால்கோவா, மைசூர்பா, ஆவின் நறுமணப்பால், ஆவின் லட்டு, ஆவின் அல்வா, ஆவின்குலோப்ஜாமுன், பாதுஷா, ஆவின் ரசகுல்லா, ஆவின் சாக்லெட், குக்கீஸ் போன்ற 16 வகையான சுவைகளில் ஆவின் ஜஸ்கிரீம் மற்றும் 100 நாட்கள் கெடாமல் இருக்கும் டெட்ரா பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் மற்றும் நறுமணப்பால் போன்ற பொருட்களை விற்பனை செய்ய ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து பாலக முகவர் மற்றும் டெப்போ முகவர்களாக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை மதுரை-சிவகங்கை மெயின் ரோட்டில் உள்ள ஆவின் மத்தியப் பண்ணை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தொடர்புக்கு 9489619032 அல்லது 9489619001-4 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை மதுரை ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். எனவே இந்த அரிய வாய்ப்பினை உரிய நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

2 + 6 =

Related Articles

Close