மதுரை ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்
Madurai Adithravidar Applying for Scholarships for Students

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு,/அரசு உதவிபெறும்/சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர்,/மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு Pre Matric, Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக 06.01.2022 அன்று முதல் escholarship.tn.gov.in என்ற
இணையதளம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
மேலும், விண்ணப்பிக்க கடைசி நாள் 10.02.2022 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியுள்ள ஆதிதிராவிட ர்/ பழங்குடியினர் / மதம் மாறிய கிருஸ்துவ (SC/ST/SCC) மாணாக்கர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
ஆகிய விவரங்களுடன் தாம் கல்வி பயிலும் கல்வி நிலையங்களில் ஒப்படைத்து இக்கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடைய
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.