மதுரை ஆண்டார்குட்டாரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
Women involved in road blockade to remove road encroachment in Andarguttaram area of Madurai

மதுரை மாவட்டம் ஆண்டார்குட்டாரம் பகுதியில் உள்ள அய்யனார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பகுதியான ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததோடு இரும்பு கதவு போட்டு சாலையை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடு அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராணி மங்கம்மாள் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் என பல்வேறு மனுக்களை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தற்போது வரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆண்டார் கொட்டாரம் பகுதியில் இருந்து கருப்பாயூரணி செல்லும் பிரதான சாலையில் பதாகைகள் ஏந்தியபடி திடீரென சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு இந்த தகவல் காவல்துறைக்கு தெரிந்தவுடன், அவர்கள் உடனடியாக வந்து சமாதனம் பேசி, விரைவில் இதுகுறித்து நடிவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அபப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.